இந்த இணையத்தளம் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மென்மேலும் மெருகூட்டப்படும் தொடர்ந்து இத்தளத்தில் உலா வாருங்கள்

Friday, 29 August 2014

28--8-2014 வெகு சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜைகள்.





செங்காராத்திமோட்டை பிள்ளையார் ஆலயத்தில் 28--8-2014 வெகு சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜைகள்.


Friday, 25 April 2014


ஆத்திமோட்டைப்பிள்ளையாரின் அன்பான   அடியவர்களுக்கு ஓர் வினயமான         வேண்டுகோள்! 


எமது குலதெய்வமாகவும் , எமது காவல்தெய்வமாகவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஆத்திமோட்டைப்பிள்ளையாரை ஓர் அழகான ஆலயத்துள் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் எனும் பேரவாவினாலே சிறிதுசிறிதாக எம்மால் சேகரிக்கப்பட்ட திருப்பணிநிதியைக்கொண்டு தூபியுடன் மூலஸ்தானத்தையும், அந்தராளமண்டபத்தையும் அமைத்துப் பூசி உட்புறத்தில் பளிங்குக்கற்களும் பதித்துமுடித்துள்ளோம். மேற்கொண்டு திருப்பணியைத் தொடர்வதற்கு எம்மிடம் பணம் பற்றாக்குறையாகவுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் அன்பான எமது உற்றார் உறவினர்களே! நீங்களும் கூடிக்குலாவிச் சென்று குளத்திலேநீராடி கும்பிட்டு குதூகலித்து உலாவிய உங்கள் கிராமத்து ஆலயம் அழகாக நிறைவேற உங்கள் அன்பான கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
எவ்வளவுவிரைவாக உங்களால் ஆலயத்திற்குப் பணம் அனுப்பிவைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆலயத்திருப்பணி நிறைவேறிக் கும்பாபிஷேகப்பெருவிழாக் காணலாம் என்று உங்களுக்கு உறுதி கூறுகின்றோம்.
இப்படிக்கு
தங்களின் தாராள சிந்தையை தயவுடன் எதிர்பார்க்கும்
நிர்வாகசபையினர். 

கீழே திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் படங்களைக்காணுங்கள்.