இந்த இணையத்தளம் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மென்மேலும் மெருகூட்டப்படும் தொடர்ந்து இத்தளத்தில் உலா வாருங்கள்

Thursday 19 December 2013





ஆத்திமோட்டைப்பிள்ளையார்ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தின் நுழைவாயிலிலே செங்காராத்திமோட்டைக்குளம் இருக்கின்றது. அனேகமான காலங்களில் 
  நீர் நிறைந்து காணப்படும் இக்குளத்தினுள்ளே அடப்பமரங்கள் நிறைந்து நிழல்தருவதனால் சூரியவெப்பத்தினால் ஆவியாகி
வெளியேறும் நீரின் அளவு மிகவும் குறைவாகவேயிருக்கம். எல்லாக் குளக்கட்டின் கீழும் பிள்ளையார் கோவில்கள் இருப்பது போன்றே
இக்குளக்கட்டின் கீழும் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. ஆனால் ஆத்திமோட்டைப்           பிள்ளையாருடன் ஏராளமான கிராம தெய்வங்களையும்
பரிகலங்களாக வைத்து வணங்கி வந்திருக்கின்றார்கள். இக்கோவிலின் சுற்றாடல் மருத மரங்களாலும் பனிக்கை மரங்களாலும்> நாவல்> இத்தி> இலுப்பை போன்ற
இன்னோரன்ன வானளாவ உயர்ந்த நிழல் மரங்களாலும் சூழ்ந்து குளிர்ச்சி பொருந்திய இனியதோர் சூழலை உருவாக்கிக்கொண்டேயிருக்கும்.
இங்கே கோவில் கொண்டு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் வினாயகப்பெருமான் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராம மக்களினால் குலதெய்வமாகவும்>
மிகவும் புதுமைவாய்ந்த தெய்வமாகவும்> விரும்பிப் போற்றி வணங்கப்படுகின்றார்.
        ஆறுமுகத்தான்புதுக்குளத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களும்> செங்காராத்திமோட்டையில் வசிக்கும் மக்களும்
தத்தம் வீடுகளில் கிணறுகள் இருந்தபோதிலும்> இக்குளத்திலேயே தினம் தினம் நீராடி ஆத்திமோட்டையப்பனை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.